செய்திகள்
உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் உண்டியல் திறப்பு: ரூ.14¼ லட்சம் காணிக்கை வசூல்

Published On 2021-06-25 06:08 GMT   |   Update On 2021-06-25 06:08 GMT
திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு, கோவில் வளாகத்தில் உள்ள 5 உண்டியல்களில் காணிக்கை செலுத்தி செல்வார்கள்.
கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்ற ஸ்தலமாகும். இக்கோவிலுக்கு கடலூர், விழுப்புரம் திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு, கோவில் வளாகத்தில் உள்ள 5 உண்டியல்களில் காணிக்கை செலுத்தி செல்வார்கள். கடந்த சில மாதங்களாக கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோவிலில் எளிமையான முறையில் தினந்தோறும் பூஜைகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்துக்கு பிறகு நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன் தலைமையிலும் கோவில் செயல் அலுவலர் முருகன், ஆய்வாளர்கள் சுபத்ரா, நரசிம்மபெருமாள் ஆகியோர் முன்னிலையிலும் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி ஒரு உண்டியல் மட்டும் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

அதில் 14 லட்சத்து 20 ஆயிரத்து 232 ரூபாயும், 306 கிராம் தங்கமும், 118 கிராம் வெள்ளியும் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. மீதமுள்ள 4 உண்டியல்கள் விரைவில் திறக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News