செய்திகள்
கொரோனா தடுப்பூசி

சிவகங்கை அருகே கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2021-06-07 22:39 IST   |   Update On 2021-06-07 22:39:00 IST
சிவகங்கை அருகே அலவாக்கோட்டையில் நகரத்தார் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி சங்க நிர்வாகி சம்பத் தலைமையில் நடைபெற்றது.
சிவகங்கை:

சிவகங்கை அருகே அலவாக்கோட்டையில் நகரத்தார் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி சங்க நிர்வாகி சம்பத் தலைமையில் நடைபெற்றது. அலவாக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் முத்துவேல் வரவேற்றார். முகாமில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு டாக்டர்கள் கார்த்திக், ஜீவபாரதி தலைமையிலான மருத்துவக்குழுவினர் கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.

பின்னர் நகரத்தார் சார்பில் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்ட ரூ.1 லட்சத்திற்கான காசோலையை சிவகங்கை தாசில்தார் தர்மலிங்கம் பெற்றுக்கொண்டார். இதில் நகரத்தார்கள் சார்பில் சிதம்பரம், கண்ணப்பன், சுப்பையா, ஊராட்சி மன்றத்தலைவர் பிரகாசம், கிராம நிர்வாக அலுவலர்கள் மூர்த்தி, சவுமியநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News