செய்திகள்
கொரோனா தடுப்பூசி

315 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-06-02 21:25 IST   |   Update On 2021-06-02 21:25:00 IST
ஒக்கூர் உள்ளிட்ட பல்வேறு ஊரிலிருந்தும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். முககவசம், சமூக இடைவெளியை பின்பற்றி 315 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கல்லல்:

காளையார்கோவில் ஒன்றியம் காளையார்மங்கலம் ஊராட்சியில் சுகாதாரத்துறையினரும், காளையார்மங்கலம் நகரத்தார்களும் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாமை நேற்று முன்தினம் நடத்தினர். இதில் நாட்டரசன்கோட்டை, பாகனேரி, பனங்குடி, ஒக்கூர் உள்ளிட்ட பல்வேறு ஊரிலிருந்தும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். முககவசம், சமூக இடைவெளியை பின்பற்றி 315 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இதில் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சிட்டாள், ஊராட்சி மன்ற தலைவர் மாலா பாலசுப்பிரமணியன், துணைத்தலைவர் நடராஜன் மற்றும் அனைத்து நகரத்தார்களும் கலந்து கொண்டனர்.

Similar News