செய்திகள்
காட்பாடி பகுதியில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறியவர்களுக்கு அபராதம்
முககவசம் அணியாதவர்கள், தடுப்பு விதிகளைச் சீராகபின்பற்றாதவர்களுக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
காட்பாடி:
காட்பாடி தாசில்தார் பாலமுருகன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு பிறகும் கடைகள் திறந்து உள்ளனவா, தேவையில்லாமல் யாராவது வெளியே சுற்றுகிறார்களா என கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியேவந்த சிலர் முககவசம் அணியாமல் வந்ததால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த 21 நாட்களில் முககவசம் அணியாமல் வந்தவர்கள், கூடுதலான நேரத்தில் கடைகளைத் திறந்தவர்கள், சமூக இடைவெளி இல்லாமல் பொதுமக்களை நிற்க வைத்தவர்கள் என அவர்களிடமிருந்து ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்து 700 அபராதமாக வசூலிக்கப்பட்டது என தாசில்தார் பாலமுருகன் தெரிவித்தார்.
இதேபோல் கே.வி.குப்பம் பகுதிகளில் கொரோனா தடுப்பு விதிகள் சீராக பின்பற்றப்படுகிறதா? என்று கே.வி.குப்பம் பஸ்நிலையம், சந்தைமேடு, வடுகந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் கே.வி.குப்பம் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது முககவசம் அணியாதவர்கள், தடுப்பு விதிகளைச் சீராகபின்பற்றாதவர்களுக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.