செய்திகள்
கைது

மாத்தூர் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது

Published On 2021-05-16 13:29 GMT   |   Update On 2021-05-16 13:29 GMT
மாத்தூர் அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவூர்:

மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் நேற்று சூரியூர், பேராம்பூர், மலம்பட்டி, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது விராலிமலை தாலுகா வளதாடிப்பட்டி அருகே உள்ள காட்டாற்றுப்பகுதியில் இருந்து வந்த ஒரு டிராக்டரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் அப்பகுதியில் இருந்து மணல் அள்ளி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஒரு யூனிட் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் மணல் கடத்திய பாக்குடி கிராமத்தை சேர்ந்த குழந்தைவேல் மகன் சுந்தரமூர்த்தி (வயது26) என்பவரை கைது செய்தனர். அதேபோல மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யோகராஜ் தலைமையிலான போலீசார் நேற்று ஆவூர், மதயானைபட்டி, கலிமங்களம், வில்லாரோடை ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கலிமங்களம் வழியாக வந்த ஒரு மாட்டு வண்டியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் கோரையாற்றுப்பகுதியில் இருந்து மணல் அள்ளி கடத்தியது தெரியவந்தது, இதையடுத்து அரை யூனிட் மணலுடன் மாட்டுவண்டியை பறிமுதல் செய்த போலீசார் மணல் கடத்திய கலிமங்களம் கிராமத்தை சேர்ந்த வெள்ளக்கண்ணு மகன் நவீன்ராஜ் (27) என்பவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News