செய்திகள்
அபராதம்

16 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்- உரிமையாளர்களுக்கு அபராதம்

Published On 2021-05-16 18:11 IST   |   Update On 2021-05-16 18:11:00 IST
சாலைகளில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 16 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து, சீர்காழி போலீஸ் நிலைய வளாகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
சீர்காழி:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கத்தால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 2-வது ஊர் அடங்கை அமல்படுத்தி உள்ளது. இதன் காரணமாக தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை பால் கடை, பழக்கடை, உணவகம், உள்ளிட்ட கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் ஊரடங்கை மீறி சீர்காழி பகுதியில் நேற்று ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் வலம்வந்தன. சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையில் ஏராளமான போலீசார் சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் சாலைகளில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 16 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து, சீர்காழி போலீஸ் நிலைய வளாகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

பின்னர் மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து, அறிவுரை வழங்கி வாகன ஓட்டிகளை அனுப்பி வைத்தனர்.

Similar News