செய்திகள்
அரிவாள் வெட்டு

மயிலாடுதுறையில் டிரைவருக்கு அரிவாள் வெட்டு- வாலிபருக்கு வலைவீச்சு

Published On 2021-05-12 18:27 IST   |   Update On 2021-05-12 18:27:00 IST
மயிலாடுதுறையில் டிரைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை டவுன் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 40). டிரைவரான இவர் அதே பகுதியில் தெருமுனையில் உள்ள மதகில் உட்கார்ந்திருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் மகன் விக்னேஷ் என்பவர் அங்கு வந்துள்ளார். அப்போது கடந்த 6 மாதத்திற்கு முன்பு விபத்தில் சிக்கிய தனது கார் சாவியை ஏன் பறித்து சென்றாய்? என்று கூறியதோடு தனது கையில் வைத்திருந்த அரிவாளை எடுத்து முரளியை வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த முரளி, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News