செய்திகள்
அரியலூரில் ஒரேநாளில் 62 பேருக்கு கொரோனா
அரியலூர் மாவட்டத்தில் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நேற்று ஒரேநாளில் மட்டும் 62 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர்:
அரியலூர் மாவட்டத்தில் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நேற்று ஒரேநாளில் மட்டும் 62 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,485 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 52 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 5,105 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 328 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 18 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,558 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 23 பேர் ஏற்கனவே உயரிழந்துள்ளனர். 2,401 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 133 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஒன்றிய அலுவலகம் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. அலுவலகத்தில் பணியாற்றும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆண்டிமடம் சுகாதார மேற்பார்வையாளர் குழந்தைவேல் மற்றும் கிராம செவிலியர்கள் ஈடுபட்டனர்.