செய்திகள்
கொரோனா வைரஸ்

மே, ஜூன் மாதத்தில் கொரோனா தாக்கம் உச்சநிலையில் இருக்கும்- ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணிப்பு

Published On 2021-04-14 06:34 GMT   |   Update On 2021-04-14 06:34 GMT
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொடங்கியது போலவே இந்தாண்டும் மார்ச் மாதத்தில் 2-வது அலை ருத்ரதாண்டவத்தை ஆரம்பித்துள்ளது.
வேலூர்:

கொரோனா கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பரவ தொடங்கியது. ஆரம்பத்தில் சாதாரணமாக கருதப்பட்ட கொரோனா வீரியம் நாட்கள் செல்ல செல்ல அதிகரித்தது.

தற்போது 2-வது அலை தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொடங்கியது போலவே இந்தாண்டும் மார்ச் மாதத்தில் 2-வது அலை ருத்ரதாண்டவத்தை ஆரம்பித்துள்ளது.

முதல் அலையை விட 2-வது அலையில் வீரியம் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா பரவல் எப்போது கட்டுக்குள் வரும் உச்சநிலையை எப்போது அடையும் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு புதிய வைரஸ் நோய் பரவும் என்றும் அதன் தாக்கம் குறித்தும் ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணித்திருந்தது. அதன்படியே புதிய வைரசின் தாக்கம் அதிகமாக இருந்தது.



கொரோனா பரவல் ஆகஸ்ட் கடைசி வாரத்தில் இருந்து செப்டம்பர் மாதத்தில் கணிசமாக குறையும் என்று ஆற்காடு பஞ்சாகங்கத்தில் கூறப்பட்டிருந்தது.

அதேபோலவே கடந்த ஆண்டும் கொரோனா தாக்கம் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் இருந்து குறைய தொடங்கியது.

இந்த ஆண்டும் கொரோனா பரவலின் தாக்கம் செப்டம்பர் மாதம் முதல் இருக்காது என்று ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

ஆவணி 29-ந்தேதி (செப்டம்பர் 14) செவ்வாய்க்கிழமை இரவு 9.48 மணிக்கு அவிட்ட நட்சத்திரம் 2-ம் பாகம் மகர ராசிக்கு குரு வக்ர பெயர்ச்சி அடைகிறார். அன்றில் இருந்து படிப்படியாக குறைந்து கொரோனா தாக்கம் இருக்காது.

மே, ஜூன் மாதத்தில் கொரோனா தாக்கம் உச்சநிலையில் இருக்கும். ஏற்கனவே நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா பரவினால் உயிர் சேதம் ஏற்படலாம். தடுப்பு ஏற்பாடுகள் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படலாம் என்று ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா பஞ்சாங்கம் ஒன்று தொற்று நோய்கள் முடிவுக்கு வந்துள்ளது. புதிய வைரசுக்கு எதிரான போரில் அனைவரும் வெற்றி பெறுவார்கள் என்றும், குரு மற்றும் கிரகங்களின் அசைவுகளால் இந்தாண்டில் பொருளாதாரம் மேம்படும் என்று கூறியுள்ளது.

மேலும் இந்தாண்டு அதிகளவில் மழை பொழியும், பால் உற்பத்தி, கல்வி, வேளாண்மை அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News