செய்திகள்
பரங்கிப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி
பரங்கிப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பரங்கிப்பேட்டை:
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆடூர் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி கசம்பூ(வயது 65). சம்பவத்தன்று இவர் தனது உறவினருக்கு பெண் பார்ப்பதற்காக ஆடூர் அகரம் கிராமத்தில் இருந்து உறவினருடன் மோட்டார் சைக்கிளில் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சில்லங்குப்பம் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தார்.
சில்லங்குப்பம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியபோது, பின்னால் அமர்ந்திருந்த கசம்பூ எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கசம்பூ பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் 0தேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.