செய்திகள்
கிருஷ்ணகிரியில் வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து மே மாதம் 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எண்ணப்பட உள்ளது. இதற்காக கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கான பொது பார்வையாளர்கள் பால்சனா, பார்த்தசாரதி சென்ஷர்மா, ஹன்ஸ்ராஜ் சுஹான், காவல் துறை பார்வையாளர் சுனில் பாஸ்கர் கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு சென்று வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானுரெட்டி உடன் சென்றார்.
வாக்கு எண்ணும் மையமான அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், வாக்குப்பதிவு எந்திரங்கள் இருப்பறை, வாகனங்கள் நிறுத்தும் இடம், வாக்குச்சாவடி முகவர்கள் அறை, ஊடக மையம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், தேர்தல் தாசில்தார் ஜெய்சங்கர், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.