செய்திகள்
விண்ணப்பம்

தபால் வாக்களிக்க 2,314 பேர் விண்ணப்பம்

Published On 2021-03-13 16:31 IST   |   Update On 2021-03-13 16:31:00 IST
நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் என மொத்தம் 12,000 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
ஊட்டி:

சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வாக்குச்சாவடிகளுக்கு நேரில் வந்து வாக்களிக்க முடியாதவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம். நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் என மொத்தம் 12,000 பேர் வாக்காளர்களாக உள்ளனர். அவர்கள் வசிக்கும் பகுதிகளில் தேர்தல் பணியாளர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று தபால் மூலம் வாக்களிப்பதற்கான 12 டி படிவங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது வரை 2 ஆயிரத்து 314 பேர் தபால் மூலம் வாக்களிப்பதற்காக பதிவு செய்து உள்ளனர். அவர்கள் தங்களது ஆவணங்களை இணைத்து விண்ணப்பித்தனர்.

Similar News