செய்திகள்
108 நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடந்தது

திருவண்ணாமலையில் உலக நன்மைக்காக 108 நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி

Published On 2021-03-12 18:07 IST   |   Update On 2021-03-12 18:07:00 IST
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு கோவில் முன்பு உலக நன்மைக்காக 108 நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நேற்று தொடங்கி இன்று காலை வரை தொடர்ந்து நடைபெற்றது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்ட கிரிவல நாதஸ்வரம் மற்றும் தவில் இசை சங்கத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி அன்று நாதசுர இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 39 வதுஆண்டாக நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு 108 நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறுவர் சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது மக்களை வெகுவாக கவர்ந்த பக்தி பாடல்களை இசைத்து மகிழ்வித்தனர்.

கோவில் முன்பு பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்கள் இசை நிகழ்ச்சியை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இரவு முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இசை நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர்.

உலக மக்கள் எந்தவித இயற்கை இடர்பாடுகளும் இல்லாமல், கொரோனா உள்ளிட்ட கொடிய நோய்கள் தாக்காமல் மகிழ்வுடன் வாழ வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Similar News