செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1½ லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் தாசில்தாரிடம் ஒப்படைத்த போது எடுத்த படம்.

தளி அருகே உரிய ஆவணமின்றி காரில் எடுத்து சென்ற ரூ.1½ லட்சம் பறிமுதல்

Published On 2021-03-07 14:47 GMT   |   Update On 2021-03-07 14:47 GMT
தளி அருகே வாகன சோதனையில் உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்து சென்ற ரூ.1½ லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ளது மதகொண்டப்பள்ளி. இங்குள்ள அரசு பள்ளி முன்பு தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் கார்த்திகேயன், சசிக்குமார், மணிமேகலை மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தளியை சேர்ந்த தனசேகர் (வயது 60) என்பதும், வீட்டு குத்தகை பணத்தை வாங்கி வந்தது தெரிந்தது.

இதைத் தொடர்ந்து உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் ரூ.1½ லட்சத்தை பறிமுதல் செய்தனர். அதிகாரிகள் அந்த பணத்தை தேன்கனிக்கோட்டை தாசில்தார் தண்டபாணியிடம் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News