செய்திகள்
அகரம்சேரியில் பாய் நெசவு தொழிலாளர்களை கனிமொழி எம்.பி. சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

ஆம்பூரில் பாய் பின்னும் தொழிலாளர்களை சந்தித்து குறைகள் கேட்ட கனிமொழி

Published On 2021-02-27 07:56 GMT   |   Update On 2021-02-27 07:56 GMT
ஆம்பூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனிமொழி எம்.பி. விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி மூலம் இன்று தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டார்.
ஆம்பூர்:

ஆம்பூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனிமொழி எம்.பி. விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி மூலம் இன்று தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டார்.

முன்னதாக ஆம்பூர் அடுத்த அகரம் சேரியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .

இதையடுத்து அகரம் சேரியில் இயங்கி வரும் பாய் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தொழிலாளர்களின் அனைத்து குறைகளையும் தீர்த்து வைப்பதாக உறுதியளித்தார். அதன் பின்னர் அகரம்சேரி முதல் குடியாத்தம் சாலையில் உள்ள பாலாற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையடுத்து மாதனூரில் நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பின்னர் ஆம்பூர் அடுத்த ஜமீனில் உள்ள கரும்பு விவசாயிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு ஆம்பூர் பஸ் நிலையத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

சான்றோர் குப்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆட்டோ டிரைவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த பின்னர் ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியில் உள்ள ரெயில்வே மேம்பால பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் ஆம்பூர் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News