செய்திகள்
புதுச்சேரி சட்டசபை

புதுச்சேரியில் இதுவரை நடந்த ஆட்சி கவிழ்ப்புகள்

Published On 2021-02-23 01:54 GMT   |   Update On 2021-02-23 01:54 GMT
புதுச்சேரி அரசியலும், ஆட்சி கவிழ்ப்பும் எப்போதும் பிரிக்க முடியாததாகத்தான் அமைந்துள்ளன. பிரெஞ்சு விடுதலைக்குப் பின் அமைந்த ஆட்சிகள் பெரும்பாலும் கவிழ்ப்புக்குள்ளானதுதான் கடந்த கால வரலாறாக இருந்து வருகிறது.
புதுச்சேரி:

புதுச்சேரியில் கடந்த 1974-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. அ.தி.மு.க.வை சேர்ந்த ராமசாமி முதல்-அமைச்சர் ஆனார். பெரும்பான்மை இல்லாததால் அவரது ஆட்சி 21 நாட்களில் கவிழ்ந்தது. பின்னர் ஜனாதிபதி ஆட்சி நடந்தது.

அதன்பின் 1977-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்று மீண்டும் ராமசாமி முதல்-அமைச்சர் ஆனார். அவரது ஆட்சி 1½ ஆண்டுகாலம் மட்டுமே நீடித்தது. 1990-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.-ஜனதாதளம் கூட்டணி வெற்றிபெற்றது. தி.மு.க.வை சேர்ந்த டி.ராமச்சந்திரன் முதல்-அமைச்சர் ஆனார். ஆனால் கோ‌‌ஷ்டிபூசல் காரணமாக அவரது ஆட்சி 11 மாதத்திலேயே கவிழ்ந்து போனது.

1996 தேர்தலில் தி.மு.க., த.மா.கா. கூட்டணி வென்றது. தி.மு.க.வை சேர்ந்த ஜானகிராமன் முதல்-அமைச்சர் ஆனார். 2000-ம் ஆண்டில் த.மா.கா. விலகியதால் அரசு கவிழ்ந்தது.

2001-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் வெற்றிபெற்றது. சண்முகம் தலைமையிலான அமைச்சரவை உருவானது. தேர்தலில் போட்டியிடாததால் 6 மாதத்தில் அவர் பதவி விலக நேரிட்டது.

2006 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் ரங்கசாமி முதல்-அமைச்சர் ஆனார். அமைச்சரவையில் அவருக்கு ஒத்துழைப்பு இல்லாததால் 2008-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் பதவி விலகினார். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சராக வைத்திலிங்கம் பதவியேற்றார்.

2016-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று நாராயணசாமி முதல்-அமைச்சர் ஆனார். எம்.எல்.ஏ.க்களின் தொடர் ராஜினாமா காரணமாக அவரது அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ் அரசு கவிழ்ந்துள்ளது.
Tags:    

Similar News