செய்திகள்
புதுவை முதல்வர் நாராயணசாமி

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னர் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் நாராயணசாமி ஆலோசனை

Published On 2021-02-22 03:58 GMT   |   Update On 2021-02-22 04:02 GMT
புதுச்சேரியில் இன்று அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், ஆதரவு எம்எல்ஏக்களுடன் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி:

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக இன்று புதுச்சேரி சட்டசபை சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

அடுத்தடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், புதுச்சேரி சட்டசபையில் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 12 ஆக குறைந்தது. எதிர்க்கட்சிகளின் பலம் நியமன உறுப்பினர்களையும் சேர்த்து 14 ஆக உள்ளது. நியமன எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்து ஓட்டுரிமை அளிக்காத பட்சத்தில் அரசு தப்பிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், முதல்வர் நாராயணசாமி, ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். துணை சபாநாயகர் பாலன் இல்லத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது. சட்டசபை நடைமுறை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News