செய்திகள்
திம்பம் மலைப்பாதையில் சுற்றிய ஒற்றை யானை.

திம்பம் மலைப்பாதையில் ஒற்றை யானையால் போக்குவரத்து பாதிப்பு

Published On 2021-02-11 09:17 GMT   |   Update On 2021-02-11 09:17 GMT
திம்பம் அடிவாரத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை யானையால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் மலைப்பாதை உள்ளது. திம்பம் அடிவாரத்தில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன.

இந்நிலையில் நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை யானை, வழி தவறி கொண்டை ஊசி வளைவு சாலைக்கு வந்தது.

பின்னர் அந்த யானை அப்படியே ஒய்யாரமாக நடந்து, புற்களை உண்டு, மூன்றாவது கொண்டை ஊசி வளைவு வரை மேல் நோக்கி ஏறி வந்ததால், அவ்வழியாக வந்த அனைத்து வாகன ஓட்டிகளும் அச்சமடைந்து, செல்ல முடியாமல் வாகனங்களை அப்படியே நிறுத்தினார்கள்.

யானை சாலையின் நடுவே சுற்றிக்கொண்டே இருந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து திரும்பி சென்றனர். பின்னர் நீண்ட நேரத்திற்கு பிறகு யானை தானாகவே சாலையோர சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள புதருக்குள் சென்று நின்று கொண்டது.

முதுமலை மற்றும் கேரள வனப்பகுதியில் இருந்து ஏராளமான யானைகள் இடம்பெயர்ந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதிக்குள் நுழைந்த காரணத்தினால் யானைகள் பெருக்கம் அதிகரித்து உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News