செய்திகள்
நாஞ்சில் சம்பத்

அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமை உள்ளது- நாஞ்சில் சம்பத்

Published On 2021-02-01 13:59 IST   |   Update On 2021-02-01 13:59:00 IST
அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமை உள்ளது என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

ஆரணி:

ஆரணியில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற நாஞ்சில் சம்பத் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

சசிகலா அ.தி.மு.க. பொது செயலாளராக இருக்கும் போது தான் சிறைக்கு சென்றார். இதனால் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்த சசிகலாவிற்கு உரிமை உள்ளது.

திராவிட இயக்கத்தை பொறுத்தவரை பொது செயலாளர் தான் கட்சியை இயக்க முடியும். அ.தி.மு.க பொதுக்குழுவில் சசிகலா பொது செயலாளர் ஆனார்.

கே.பி.முனுசாமி கருத்தை வைத்து பார்க்கும் போது சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்த்து கொள்வதாக தெரிகிறது.

சசிகலாவை சேர்க்காவிட்டால் அ.தி.மு.க. 2-ஆக உடையும்.

வரும் தேர்தலில் தி.மு.க. 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று புதிய அத்தியாயத்தை படைக்கும் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார்.

ஜே.பி.நட்டாவை பார்த்து தமிழக மக்கள் ஓட்டு போடும் அளவுக்கு பலவீனமானவர்கள் அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News