செய்திகள்
தற்கொலை

கடலூர் அருகே பெண் போலீஸ் தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2021-01-23 14:31 IST   |   Update On 2021-01-23 14:31:00 IST
கடலூர் அருகே தூக்குபோட்டு பெண் போலீஸ் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:

கடலூர் அருகே நடுவீரப்பட்டு போலீஸ் சரகம் பத்திரக்கோட்டையை சேர்ந்தவர் நாகமுத்து. அவரது மகள் சரண்யா (வயது 27). இவர் அரியலூர் மாவட்டத்தில் ஆயுதப்படை போலீசாக இருந்து வந்தார். சரண்யாவுக்கு முடக்குவாதம் நோய் இருந்து வந்ததால் கடந்த 2 மாதமாக விடுமுறை எடுத்து சிகிச்சை பெற்று வந்தார்.

மீண்டும் பணிக்கு திரும்பியவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் 3 நாட்கள் விடுமுறையில் வீட்டிற்கு வந்தார். நேற்று வெளியில் சென்று வந்த அவரது தாயார், வீட்டு கதவு நீண்ட நேரம் திறக்காத நிலையில் இருந்ததால் சந்தேகமடைந்து கதவைத் திறந்து பார்த்தார். அப்போது சரண்யா தூக்கு மாட்டி இறந்த நிலையில் இருந்ததை பார்த்து அவரது தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

தகவல் அறிந்த நடுவீரப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த பெண் போலீஸ் சரண்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

Similar News