செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் மற்றும் கைது செய்யப்பட்ட அமுதாவை படத்தில் காணலாம்.

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்- பெண் கைது

Published On 2021-01-16 15:49 IST   |   Update On 2021-01-16 15:49:00 IST
சீர்காழியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானி தெருவில் ஒரு வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சீர்காழி போலீஸ் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன், போலீசார் ஸ்டாலின், தினேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த சீர்காழி ஈசானி தெருவை சேர்ந்த காளிதாஸ் மனைவி அமுதா (வயது37) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 419 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து அமுதாவை கைது செய்தனர். .பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

Similar News