செய்திகள்
சினிமா தியேட்டர் (கோப்புப்படம்)

தமிழக திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்திருப்பது விதிமீறல்: மத்திய உள்துறை

Published On 2021-01-06 18:52 IST   |   Update On 2021-01-06 22:28:00 IST
தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்திருப்பது விதிமீறல் என மத்திய உள்துறை செயலாளர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக தியேட்டர்களில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதை தமிழக அரசு 100 சதவீதமாக உயர்த்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இந்த நிலையில் தமிழக தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்திருப்பது விதிமுறை மீறல். மத்திய அரசு வெளியிட்ட கொரோனா வழிமுறைகளை கடைபிடிக்காதது ஏன்?. மத்திய அரசின் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

Similar News