செய்திகள்
இலுப்பூர் அருகே பஸ் மோதி தொழிலாளி பலி
இலுப்பூர் அருகே பஸ் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னவாசல்:
இலுப்பூர் அருகே உள்ள போலம்பட்டியை சேர்ந்தவர் மூக்கையா (வயது 55). கூலித் தொழிலாளியான இவர் வேலையின் காரணமாக இலுப்பூர் சென்றுவிட்டு மீண்டும் போலம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மேட்டுசாலை எனும் இடத்தில் சென்றபோது இலுப்பூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மூக்கையா தலை நசுங்கி பலியானார். இதுகுறித்த தகவலின் பேரில் இலுப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சம்பவ இடத்திற்கு சென்று மூக்கையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பஸ் டிரைவர் இலுப்பூர் மேலப்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ராமச்சந்திரனை (27) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.