செய்திகள்
நில உரிமை ரத்துக்கான ஆணையை ரெத்தினவேலுவிடம், உதவி கலெக்டர் பழனிகுமார் வழங்கியபோது எடுத்தபடம்.

வீட்டை விட்டு தந்தையை வெளியேற்றியவரின் நில உரிமை ரத்து - உதவி கலெக்டர் நடவடிக்கை

Published On 2020-12-24 20:06 IST   |   Update On 2020-12-24 20:06:00 IST
நாகையில் வீட்டை விட்டு தந்தையை வெளியேற்றியவரின் நில உரிமையை ரத்து செய்து உதவி கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள தேவூர் கச்சனம் பகுதியை சேர்ந்தவர் ரெத்தினவேலு(வயது73). இவருக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். ரெத்தினவேலு தனக்கு சொந்தமான 2 ஏக்கர் 7 சென்ட் நிலத்தை இளைய மகன் ஆனந்த் பெயரில் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி தானம் செட்டில்மென்ட் ஆவணம் செய்து கொடுத்துள்ளார். அதன் பிறகு ஆனந்தும், அவரது மனைவியும் ரெத்தினவேலுவை தரக்குறைவாக பேசி வீட்டை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சளுக்கு ஆளான ரெத்தினவேலு நாகை உதவி கலெக்டர் பழனிகுமாரிடம் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின்படி செட்டில்மென்ட் ஆவணத்தை ரத்து செய்ய பத்திர பதிவுத்துறைக்கு உத்தரவிடக்கோரி புகார் மனு அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட உதவி கலெக்டர் பழனிகுமார் நிலத்தை பெற்றுக்கொண்டு தந்தையை வீட்டை விட்டு வெளியேற்றிய ஆனந்துக்கு ரெத்தினவேலு எழுதிக்கொடுத்த நில உரிமைக்கான ஆவணத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். இதற்கான ஆணை ரெத்தினவேலுவிடம் வழங்கப்பட்டது.

Similar News