செய்திகள்
நகை பறிப்பு

பொன்னமராவதி அருகே மூதாட்டியிடம் 11 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு

Published On 2020-12-21 11:10 IST   |   Update On 2020-12-21 11:10:00 IST
பொன்னமராவதி அருகே, மூதாட்டியிடம் 11 பவுன் தாலிச்சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பொன்னமராவதி:

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள பகவாண்டிப்பட்டி ஊராட்சி காயாம்புஞ்சை பகுதியை சேர்ந்தவர் காசி. இவரது மனைவி பஞ்சவர்ணம் (வயது 65). இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் கழிப்பறை செல்ல வீட்டை விட்டு வெளியே வந்தார்.

அப்போது அங்கு கத்தியுடன் நின்ற மர்ம நபர், பஞ்சவர்ணம் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 11 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து பொன்னமராவதி போலீசில் பஞ்சவர்ணம் புகார் அளித்தார். புகாரின்பேரில், மூதாட்டியிடம் தாலிச்சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News