செய்திகள்
கோப்புபடம்

புதுக்கோட்டை அருகே முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-12-18 18:37 IST   |   Update On 2020-12-18 18:37:00 IST
புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முபாரக் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் நெல்லை பைசல் கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில் அந்த அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள், பெண்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.

Similar News