செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுச்சேரியில் மேலும் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-12-15 16:51 IST   |   Update On 2020-12-15 16:51:00 IST
புதுச்சேரியில் இன்று 38 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,750 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. இன்று காலை வெளியிடப்பட்ட தகவலில் கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 22 ஆயிரத்து 65 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 99 லட்சத்து 6 ஆயிரத்து 165 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 3 லட்சத்து 39 ஆயிரத்து 820 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் இன்று 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,750ஆக உயர்ந்துள்ளது.

Similar News