செய்திகள்
ரூ.2 கோடியில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகள் முகமை திட்ட இயக்குனர் ப.ஜெயசுதா ஆய்வு செய்த காட்சி

ரூ.2 கோடியில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகள் முகமை திட்ட இயக்குனர் ப.ஜெயசுதா ஆய்வு

Published On 2020-12-12 20:53 IST   |   Update On 2020-12-12 20:53:00 IST
கீழ்பென்னாத்தூர் அருகே ரூ.2 கோடியில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகள் முகமை திட்ட இயக்குனர் ப.ஜெயசுதா ஆய்வு செய்தார்.
கீழ்பென்னாத்தூர்:

கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த சோமாசிபாடி ஊராட்சியில் குப்பைகளை தரம்பிரிக்க ரூ 21½ லட்சத்தில் கட்டிடம் கட்டப்படுகிறது. இதனை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தினார். மேலும் அருகிலுள்ளதண்ணீர் நிரம்பி இருந்த குளத்தை பார்வையிட்டார். அங்குள்ள மண்புழு உரம் தயாரிக்கும் இடத்தையும் பணியில் கண்டறிந்த சிறுசிறு குறைபாடுகளை விரைவாக சரி செய்யுமாறு கூறினார்.

இதனையடுத்து கலிங்கலேரி ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் குடிநீர் குழாய்இணைப்பு வழங்கப்பட்டுள்ள தை பார்வையிட்டும், வழங்கப்படாத குடும்பங்களுக்கு உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்குமாறும் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது, கீழ்பென்னாத்தூர் ஒன்றிய ஆணையாளர் பழனி, வட்டார வளர்ச்சி அலுவலர் மகாதேவன் ள்பட அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Similar News