செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

போச்சம்பள்ளி அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை, பணம் திருட்டு

Published On 2020-11-09 09:55 IST   |   Update On 2020-11-09 09:55:00 IST
போச்சம்பள்ளி அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை, பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:

மத்தூர் அருகே உள்ள கொத்தகோட்டையை சேர்ந்தவர் வசந்தா (வயது 48). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டில் இருந்தார். அந்த நேரம் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 12 ஆயிரம் ரொக்கம், வெள்ளி, தங்க நகைகளை திருடி சென்றனர்.

அதேபோல அருகில் உள்ள ராணி என்பவரின் வீட்டில் இருந்த பித்தளை அண்டா உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றனர். மேலும் அந்த பகுதியைச சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், வீட்டில் பணம் எதுவும் இல்லாததால் துணிகளை வீசி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மத்தூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News