செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

நாகரசம்பட்டி அருகே அடுத்தடுத்த வீடுகளில் 15 பவுன் நகை திருட்டு

Published On 2020-11-08 11:12 IST   |   Update On 2020-11-08 11:12:00 IST
நாகரசம்பட்டி அருகே அடுத்தடுத்த வீடுகளில் 15 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:

கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகே உள்ள விளங்காமுடி கிராமத்தை சேர்ந்தவர் ராமேஸ்வரன். விவசாயி. சம்பவத்தன்று விவசாய பணிகளை மேற்கொள்ள அவர் வீட்டை பூட்டி விட்டு தோட்டத்திற்கு சென்றார். நேற்று முன்தினம் அவர் வீட்டுக்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகை, ரூ.1 லட்சம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.

இதேபோல், இவருடைய வீட்டின் அருகே வசித்து வந்த விவசாயி லிங்கேஸ்வரன் வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து பீரோவில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகை திருடி சென்றனர். மேலும் அருகில் உள்ள 3 வீடுகளிலும் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கு ஏதுவும் கிடைக்காததால் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர். அடுத்தடுத்த வீடுகளில் நகை, பணம் திருட்டு போன சம்பவம் குறித்து நாகரசம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். இது தொடர்பாக நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Similar News