செய்திகள்
காஞ்சீபுரம் அருகே வேன் மோதி மின்வாரிய ஊழியர் பலி
காஞ்சீபுரம் அருகே வேன் மோதி மின்வாரிய ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த திம்மசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 52). இவர் தாமலில் உள்ள மின்சாரத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஒலிமுகமதுப்பேட்டையில் இருந்து திம்மசமுத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். காஞ்சீபுரத்தை அடுத்த ஏரிவாக்கம் பகுதியில் கருணாகரன் சென்றபோது எதிரே வந்த ஒரு வேன் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கருணாகரன் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.