செய்திகள்
மலைப்பகுதிகளில் வீசப்பட்ட விதைப்பந்துகள்

மலைப்பகுதிகளில் 20 ஆயிரம் விதைப்பந்துகள் வீசப்பட்டன

Published On 2020-11-04 12:44 IST   |   Update On 2020-11-04 12:44:00 IST
தன்னார்வலர்கள் தயாரித்த 20 ஆயிரம் விதைப்பந்துகள் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மலைப்பகுதியில் வீசப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் உள்ள மலைகளை பசுமையாக்க தன்னார்வலர்கள் 20 ஆயிரம் விதைப்பந்துகளை தயாரித்தனர். அவற்றை பெருமுகை பகுதியில் உள்ள மலைகளில் வீசும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

உதவி கலெக்டர்கள் கணேஷ் (வேலூர்), ஷேக்மன்சூர் (குடியாத்தம்) ஆகியோர் தலைமையில் அதிகாரிகள், தன்னார்வலர்கள் விதைப்பந்துகளை மலைப்பகுதியில் வீசினர். இந்த பந்துகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மலைப்பகுதியில் வீசப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Similar News