செய்திகள்
கோப்புபடம்

ஊத்தங்கரை அருகே லாட்டரி சீட்டுக்கள் விற்ற 6 பேர் கைது

Published On 2020-11-03 16:19 IST   |   Update On 2020-11-03 16:19:00 IST
ஊத்தங்கரை அருகே லாட்டரி சீட்டுக்கள் விற்ற 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்காவது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்றதாக கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகர் யுகேந்திரன் (வயது 31), சுண்டேகுப்பம் குமார் (42), கந்திகுப்பம் காமராஜ் நகர் முனியப்பன் (52), போச்சம்பள்ளி எம்.ஜி.ஆர். நகர் ராஜா (55), தேன்கனிக்கோட்டை பைபாஸ் சாலை அப்துல் ஜாபர் (60), ஊத்தங்கரை தர்மராஜா கோவில் யாரப் (37) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 25 லாட்டரி சீட்டுக்கள் மற்றும் ரூ.1,200 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News