செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

கிருஷ்ணகிரியில் அரசு போக்குவரத்து கழக மெக்கானிக் வீட்டில் 4½ பவுன் நகை திருட்டு

Published On 2020-11-03 11:36 IST   |   Update On 2020-11-03 11:36:00 IST
கிருஷ்ணகிரியில் அரசு போக்குவரத்து கழக மெக்கானிக் வீட்டில் 4½ பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி திருமலை நகர் தீர்த்தகிரி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 41). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 31-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன் வெளியே சென்றார்.

நேற்று முன்தினம் அவர்கள் வீடு திரும்பினார்கள். அப்போது வீட்டை திறந்து பார்த்த போது, வீட்டின் உள் இருந்த பீரோ திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையின் ஜன்னல் கம்பிகளை உடைத்த மர்மநபர்கள் உள்ளே நுழைந்து, பீரோவில் இருந்த 4½ பவுன் நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து சசிகுமார், கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாஜூதீன் வழக்குப்பதிவு செய்து, கைரேகை நிபுணர்களை வரவழைத்து, பீரோவில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து சென்றனர். மேலும், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News