செய்திகள்
அரியலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு
அரியலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் கடந்த 20-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். நேற்று அவர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 10 பவுன் நகையை காணவில்லை. இதையடுத்து வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்து, நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து அரியலூர் போலீசில், கிருஷ்ணன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.