செய்திகள்
சங்கராபுரம் அருகே பள்ளி மாணவி கடத்தல்
சங்கராபுரம் அருகே பள்ளி மாணவியை வாலிபர் ஒருவர் கடத்தி செல்லப்பட்டது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் இருவரையும் தேடி வருகிறார்கள்.
சங்கராபுரம்:
சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாயார் பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை.
விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் நாவக்கொல்லை கிராமத்தை சேர்ந்த தண்டபாணி மகன் சங்கர்(34) என்பவர் மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.
இது குறித்து அவரது தாயார் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவமூர்த்தி வழக்குப்பதிவுசெய்து வாலிபரையும், மாணவியையும் தேடி வருகிறார்.