செய்திகள்
வங்கி கணக்கு

கிசான் திட்டத்தில் முறைகேடு பணத்தை திரும்ப செலுத்தாவிட்டால் அரசு சலுகைகள் ரத்து

Published On 2020-10-21 07:41 GMT   |   Update On 2020-10-21 07:41 GMT
கிசான் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்கள் திருப்பிச் செலுத்த காலக்கெடு விதிக்கப்பட்டதுடன், அரசின் சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர்:

கிசான் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்கள் திருப்பிச் செலுத்த காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பணம் செலுத்தாமல் இருப்பவர்களுக்கு அரசின் சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் 14.26 கோடி ரூபாய் அளவிற்கு கிசான் திட்டத்தில் மோசடி நடந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 11 கோடி ரூபாய் அளவிற்கு பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

பணத்தை வசூல் செய்யும் பணியில் வேளாண் துறை மற்றும் வருவாய்த் துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக கடலூர் மாவட்டத்தில் இதுவரை 13 பேரை சிபிசிஐடி கைது செய்துள்ளது.
Tags:    

Similar News