செய்திகள்
கடலூரில் நேற்று பெய்த சாரல் மழையின் போது குடை பிடித்தபடி சென்றவர்களை படத்தில் காணலாம்.

கடலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை

Published On 2020-10-19 11:01 GMT   |   Update On 2020-10-19 11:01 GMT
கடலூர் மாவட்டத்தில் இடி- மின்னலுடன் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக தொழுதூரில் 49 மில்லி மீட்டர் பதிவானது.
கடலூர்:

வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இதையொட்டி கடலூரில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு திடீரென குளிர்ந்து காற்று வீசத்தொடங்கியது. சற்று நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நேரம் செல்ல, செல்ல பலத்த மழையாக பெய்தது.

நள்ளிரவு 12 மணி அளவில் மழை ஓய்ந்து, பிறகு சாரல் மழையாக பெய்ய தொடங்கியது. இரவு 1 மணிக்கு பிறகு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. விடி, விடிய இந்த மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. கடலூர் அண்ணா விளையாட்டு மைதானம், மஞ்சக்குப்பம் மைதானம் போன்ற பல்வேறு இடங்களில் மழைநீர் குட்டை போல் தேங்கி நின்றது.

கடலூர் கோ-ஆப்டெக்ஸ் எதிரே உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட் சேறும், சகதியுமாக மாறிக் கிடந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டனர். இதேபோல் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், தொழுதூர், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், லால்பேட்டை உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தொழுதூரில் 49 மில்லி மீட்டர் மழை பதிவானது. குறைந்தபட்சமாக மே.மாத்தூரில் 2 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம்(மில்லி மீட்டரில்) வருமாறு:-

கலெக்டர் அலுவலகம் - 42.6

கீழசெருவாய் - 32

கடலூர் - 29

குறிஞ்சிப்பாடி - 27

லக்கூர் - 24.4

காட்டுமன்னார்கோவில் - 20.4

புவனகிரி - 18

கொத்தவாச்சேரி - 17

லால்பேட்டை - 16

எஸ்.ஆர்.சி. குடிதாங்கி - 12.5

வானமாதேவி - 12

பரங்கிப்பேட்டை - 10.2

பண்ருட்டி - 10

சிதம்பரம் - 6.2

அண்ணாமலைநகர் - 6

சேத்தியாத்தோப்பு - 6

வடக்குத்து - 5

குப்பநத்தம் - 4.8

ஸ்ரீமுஷ்ணம் - 3.1
Tags:    

Similar News