செய்திகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி

பண்ருட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-10-10 20:05 IST   |   Update On 2020-10-10 20:05:00 IST
பண்ருட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பண்ருட்டி:

பண்ருட்டி நகரில் உள்ள அனைத்து கழிவுநீர் வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும். வார்டுகளில் உள்ள குப்பைகளை அகற்றி, கொசு மருந்து அடிக்க வேண்டும். கெடிலம் ஆறு சுடுகாட்டு பகுதி மற்றும் தாசில்தார் அலுவலக சுற்றுச்சுவருக்கு உள்ளே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பண்ருட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் ஆர்.உத்தராபதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் உதயகுமார், நகர்க்குழு உறுப்பினர்கள் ஜீவானந்தம், தினேஷ், சங்கர், தேவராஜீலு, ராஜேந்திரன், மகாலட்சுமி, வசந்தா மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Similar News