செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
வேளாங்கண்ணி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி அருகே 15 வயது சிறுமியை காணவில்லை என அந்த சிறுமியின் தந்தை கடந்த ஆகஸ்டு மாதம் கீழையூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் திருப்பூண்டி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் காரப்பிடாகை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மேகநாதன் மகன் பிரசாத் (வயது 19) என்பதும், இவர் சிறுமியை அழைத்து சென்று அவளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் பிரசாத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.