செய்திகள்
பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா?: சிறப்பு குழுக்கள் மூலம் கண்காணிப்பு
பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என சிறப்பு குழுக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக கலெக்டர் தெரிவித்தார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வர காரணம், பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காததே ஆகும். தொற்று உறுதியானவர்களுக்கு சிகிச்சை அளிக்க ‘கோவிட் கேர் சென்டர்’ அதிகரிக்கப்பட்டு உள்ளது. பொது இடங்களில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கபடுவதை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் 10 நாட்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு நிறுவனங்களிலும் பாதுகாப்பு வழிமுறைகளை சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அலுவலர் உறுதி செய்ய வேண்டும். இதை மீறினால் அபராதம் விதிப்பதோடு, ‘சீல்’ வைக்கப்படும்.
நீலகிரியில் இதுவரை ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தற்போது உள்ள இ-பாஸ் நடைமுறையில் மாற்றம் எதுவும் இல்லை. பொதுமக்கள் தேவை இல்லாமல் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில்தான் அரசு பஸ்கள் அதிகமாக இயக்கப்படுகிறது. 70 சதவீத பஸ்கள் அதாவது 178 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.