செய்திகள்
கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் ஜெயகாந்தன் தொடங்கி வைத்தார்.

ரூ. 85 லட்சத்திற்கு கதர் விற்பனை செய்ய இலக்கு- கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்

Published On 2020-10-03 09:19 GMT   |   Update On 2020-10-03 09:19 GMT
தீபாவளி பண்டிகையையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் ரூ. 85 லட்சத்திற்கு கதர் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியம் சார்பில் காந்தி பிறந்த நாள் விழா மற்றும் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா சிவகங்கையில் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலை வகித்தார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி வரவேற்று பேசினார்.

விழாவில் மகாத்மா காந்தியின் திருவுருவப்படத்தை கலெக்டர் திறந்து வைத்து சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்து கூறியதாவது:- சிவகங்கை மாவட்டத்திற்கு இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.85 லட்சத்திற்கு கதர் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் அனைத்து கதர் பாலியஸ்டர் மற்றும் பட்டு ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

கதர் ஆடை வாங்கி அணிவதனால் பல அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை நடைபெறுகிறது. தமிழக அரசு கதர் கிராம தொழில் வாரியம் மூலமாக பல லட்சக்கணக்கான ஏழை எளிய நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பளிக்கிறது. எனவே கதர் ஆடைகளை வாங்கி ஏழை நெசவாளர்களுக்கு உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் சிவகங்கை ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர், தியாகி சண்முக காந்தி, ஆர்.டி.ஓ. முத்துக்கழுவன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வெற்றிவேந்தன், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் கேசவன், கூட்டுறவு வங்கி இயக்குனர் ஜெயபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News