செய்திகள்
கடலூரில் வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது எடுத்த படம்.

புதிய வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு: கடலூரில், வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

Published On 2020-10-03 14:21 IST   |   Update On 2020-10-03 14:21:00 IST
புதிய வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூரில் வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
கடலூர்:

விவசாயத்தை அழித்து, விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். கிராம சபை கூட்டத்தை ரத்து செய்த தமிழக அரசை கண்டித்தும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பன்குளத்தில் வயலில் இறங்கி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்துக்கு மாவட்ட குழு உறுப்பினர் பழனி தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாதவன், குடியிருப்போர் சங்க செயலாளர் மருதவாணன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கருப்பையன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் சுப்புராயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் அமர்நாத், வாலிபர் சங்க நகர செயலாளர் தமிழ்மணி, நகர்க்குழு செந்தில், பக்கீரான் மற்றும் விவசாயிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறும் வரை தொடர்ந்து போராடுவோம், விவசாயிகள் விரோத சட்டங்களை நடைமுறைப்படுத்த அனுமதிக்க மாட்டோம், வேளாண் சட்டங்களை ஆதரிக்கிற துரோகிகளை புறக்கணிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Similar News