செய்திகள்
திருமருகல் ஒன்றியத்தில் கொரோனா பரிசோதனை முகாம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் கொரோனா மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
திட்டச்சேரி:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் கொரோனா மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. திருமருகல் ஒன்றியத்தில் உள்ள நரிமணம் ஊராட்சியில் நடந்த கொரோனா பரிசோதனை முகாமில் நரிமணம், சுல்லாங்கால், வெள்ளப்பாக்கம் பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாமிற்கு ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஞானசெல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அன்பரசு ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி, மருத்துவர்கள் மணிவேல், கார்த்திக் ஆகியோர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக், ஒன்றியக்குழு உறுப்பினர் மஞ்சுளா மாசிலாமணி, துணை தலைவர் ராமதாஸ், ஊராட்சி செயலாளர் முருகேஸ்வரி, சுகாதார ஆய்வாளர்கள் பரமநாதன், பிரபாகரன், அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.