செய்திகள்
கைது

திருக்கழுக்குன்றத்தில் வங்கி ஊழியர் வீட்டில் நகை திருடிய வழக்கில் 3 பேர் கைது

Published On 2020-09-13 10:49 GMT   |   Update On 2020-09-13 10:49 GMT
திருக்கழுக்குன்றத்தில் வங்கி ஊழியர் வீட்டில் நகை திருடிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கல்பாக்கம்:

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ள வங்கியில் காசாளராக பணியாற்றி வருபவர் நந்தகோபால். இவர் திருக்கழுக்குன்றம் தீயணைப்பு நிலையம் எதிரே குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் அவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 5 பவுன் நகை, டி.வி., வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திருடப்பட்டிருந்தது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் உத்தரவுபடி மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தர வதனம் தலைமையில் இன்ஸ்பெக்டர் முனிசேகர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், செந்தில்வேலன், திருநாவுக்கரசு, சரவணன், ராஜா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாமல்லபுரம் அடுத்த தாழம்பூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது வேகமாக வந்த காரை நிறுத்தி அதில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வங்கி ஊழியர் வீட்டில் திருடியதும், அவர்கள் ஓட்டி வந்த கார் வங்கி ஊழியருக்குரியது என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர்கள் கல்பாக்கத்தை அடுத்த ஆயப்பாக்கம் விஜி (வயது 26), புதுப்பட்டினம் ராஜா (26) மற்றும் பூந்தண்டலம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (24) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 5 பவுன் நகை, டி.வி போன்றவை கைப்பற்றப்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News