செய்திகள்
பூங்கா பயன்பாடு இன்றிபூட்டி கிடப்பதை படத்தில் காணலாம்.

காந்தி கிராமத்தில் உள்ள பூங்கா சீர் செய்யப்படுமா?

Published On 2020-09-06 14:51 IST   |   Update On 2020-09-06 14:51:00 IST
கரூர் நகராட்சிக்கு உட்பட்ட காந்தி கிராமத்தில் உள்ள பூங்காவை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்:

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட காந்தி கிராமத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் அப்பகுதி மக்களுக்காக ரூ.5 லட்சத்தில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நடைபயிற்ச்சி பாதைகளுடன் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தாந்தோணி நகராட்சியை கரூர் நகராட்சியுடன் இணைத்தனர். அதன்பின்னர் அந்த பூங்காவை பராமரிப்பு செய்யாத காரணத்தால் முட்கள் முளைத்து புதர் மண்டி காணப்பட்டன. இதனால் பொது மக்கள் அப்பூங்காவை பயன்படுத்த முடியாமல், சமூக விரோதிகளின் புகலிடமாக மாறிப்போனது. இதனால் பூங்கா மூடப்பட்டது.

தற்போது காந்திகிராமம் பகுதியில் குடியிருப்புகளின் எண்ணிக்கை உயர்ந்து, நன்கு வளர்ச்சி அடைந்த பகுதியாக மாறி வருகிறது. அதேநேரத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவும் மாறிவிட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நடைபயிற்ச்சி செல்ல இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். பொழுது போக்கு பூங்கா ஏதும் இல்லாததால் குழந்தைகள் தெருக்களில் விளையாடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அப்பூங்காவை சீர் செய்து மீண்டும் திறந்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News