செய்திகள்
கோப்பு படம்.

கடலூரில் இடி தாக்கி 2 பெண்கள் உயிரிழப்பு

Published On 2020-09-01 19:38 IST   |   Update On 2020-09-01 19:38:00 IST
கடலூர் சித்தமல்லி கிராமத்தில் அறுவடைப் பணியின் போது இடி தாக்கி 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடலூர்:

கடலூர் சித்தமல்லி கிராமத்தில் விளை நிலத்தில் அறுவடைப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண்கள் மீது இடி தாக்கியது. இதில் ஆனந்தி, மரியநட்சத்திரம் ஆகிய 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த சம்பவம் குறித்து கேள்விபட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். 

ஆனந்தி, மரியநட்சத்திரம் ஆகிய 2 பெண்கள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News