செய்திகள்
ஆர்ப்பாட்டம்

கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-09-01 13:58 IST   |   Update On 2020-09-01 13:58:00 IST
புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் குணசேகரன், கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் சரவணக்குமார் ஆகியோர் பேசினர்.

கூட்டுறவுத்துறையில் பணியாற்றும் கீழ்நிலை அலுவலர்களுக்கான துணைப்பதிவாளர், கூட்டுறவு சார்பதிவாளர் பணியிடங்கள் இழக்கப்பட்டு பதவி உயர்வு பாதிக்கப்படும் வகையிலான திட்டத்தை அனுமதிக்க கூடாது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Similar News