செய்திகள்
விபத்து

ஆதனக்கோட்டை அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்: 2 பேர் பலி

Published On 2020-08-31 16:59 IST   |   Update On 2020-08-31 16:59:00 IST
ஆதனக்கோட்டை அருகே நின்றிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கானூர்பட்டி தாழம்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 50). அதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (40). இருவரும் சென்டிரிங் தொழிலாளிகள்.

இந்த நிலையில் மாரிமுத்துவும், ரமேசும் புதுக்கோட்டையில் பாலன்நகர் பகுதி யில் சென்டரிங் வேலையை செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண் டிருந்தனர்.

அப்போது ஆதனக் கோட்டை அருகே டீசல் போடுவதற்காக பட்டுக் கோட்டையை சேர்ந்த அருள் ராஜ் ஓட்டிவந்த லாரியை நிறுத்தி இருந்தார்.

இதை மாரிமுத்து கவனிக்காததால், நின்றிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மாரிமுத்து, ரமேஷ் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அழகம்மாள், மற்றும் ஆதனக்கோட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கனகராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Similar News