செய்திகள்
கொள்ளை

விருத்தாசலத்தில் போலி காசோலை கொடுத்து மூதாட்டியிடம் பணம் அபேஸ்

Published On 2020-08-29 14:26 GMT   |   Update On 2020-08-29 14:26 GMT
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் போலி காசோலை கொடுத்து மூதாட்டியிடம் பணத்தை பறித்து சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வயலூரை சேர்ந்தவர் நீலாம்மாள் (வயது 70). இவர் முதியவர் உதவிதொகை பெறுவதற்கான இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் மாதம் 4 கிலோ அரிசி வாங்கி வருகிறார்.

நேற்று மாலை இவர் வீட்டில் இருந்தபோது வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது நீலாம்மாளிடம் உங்களுக்கு ரூ.12 ஆயிரம், 10 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை நேற்று முன்தினமே வந்துவிட்டது. அதனை ரேசன் கடைக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம். இதற்கு முன்பணமாக ரூ.3 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

இதனை நம்பிய நீலாம்மாள் மருந்து வாங்க வைத்திருந்த ரூ.2,800 ஐ அந்த வாலிபரிடம் கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட அந்த வாலிபர் ஒரு காசோலையை நீலாம்மாளிடம் கொடுத்தார். இதனை வாங்கி பார்த்த அவர் அந்த காசோலையை வங்கியில் செலுத்த முயன்றபோது அது போலி என தெரியவந்தது. அப்போது தான் மர்மநபரிடம் ஏமாந்ததை நீலாம்மாள் உணர்ந்தார்.

இது தொடர்பாக விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News